Saturday, October 29, 2011

மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்: ( 6 பேருக்கு )
  • மட்டன் - 1 /2 கிலோ
  • சீர க சம்பா அரிசி - 3 /4 கிலோ
  • நெய் 200 கிராம்
  • இஞ்சி பூண்டு விழுது - 3 ஸ்பூன்
  • பெரிய வெங்காயம்- 200 கிராம்
  • தக்காளி - 300 கிராம்
  • பச்சை மிளகாய் - 10
  • புதினா 1 கப்
  • கொத்தமல்லி தழை 1 கப்
  • முந்திரி பருப்பு விழுது 25 கிராம்
  • தேங்காய் பால்
  • வத்தல் பொடி - 3 ஸ்பூன்
  • உப்பு
  • தயிர் 50 கிராம்
செய்முறை
  • மட்டன்- ஐ 50 கிராம் தயிர், 1 ஸ்பூன் வத்தல் பொடி, சிறிது அளவு உப்பு சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது அளவு நெய் போட்டு வறுக்கவும்

  • குக்கரில் 200 கிராம் நெய் போட்டு, காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும்
  • நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
  • கொத்தமல்லி புதினா வதக்கவும்
  • தக்காளி போட்டு, சிறிது உப்பு போட்டு வதக்கவும்
  • ஊற வைத்துள்ள மட்டன்- ஐ சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் மீதம் உள்ள வத்தல் பொடி சேர்க்கவும். தேவையான அளவு கரம் மசாலா சேர்க்கவும்... நன்கு வதக்கவும்...
  • அரைத்து வைத்த முந்திரி விழுது சேர்க்கவும்
  • 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மட்டன்-ஐ விசில் வந்த பிறகு, சிம் - இல் 10 நிமிடம் வேக விடவும்.
  • ஸ்டீம் அடங்கிய உடன் குக்கரை திறந்து நன்கு கிளறவும்.
  • அரிசி : தண்ணீர் : தேங்காய் பால் :: 1 : 1 .25 :1
  • மட்டன் வெந்த பிறகு உள்ள தண்ணீரை சேர்த்து தான் மேல் கூறிய விகிதம்
  • முதலில் தண்ணீர் + தேங்காய் பால் சேர்த்து கொதித்த பிறகு அரிசி சேர்க்கவும்.
  • விசில் வந்த பிறகு 7 நிமிடம் சிம்-இல் வைத்து இறக்கவும்.

சுவையான மணமான மட்டன் பிரியாணி தயார்.



Thursday, March 24, 2011

சுவையான பரோட்டா

அன்பானவர்களே,
நீண்டகாலம் ஆகிவிட்டது,நாம் பேசி.எனக்கு ப்ளாக் அறிவு கொஞ்சம் குறைவு தான்.

என்னுடைய பெண்களிடம் கேட்டுத்தான் நான் இதனுள்ளே வருகின்றேன்.
எனக்கு தெரிந்த சமையலின் ஒரு சிறு துளியை தான் இப்பொழுதுஉங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்


பரோட்டா செய்யும் முறை:(இரண்டு பேருக்கு மட்டும்)

முதலில் கால்படியில் முக்கால் பாகம் எடுத்து சலித்துக் கொள்ளவும். அத்துடன் பெயருக்கு சிறிதளவு உப்பு சேர்க்கவும். அத்துடன் டீஸ்பூன் எண்ணெய்சேர்க்கவும்.இந்தமூன்றையும் ஒரு ரெண்டு நிமிடம் பிரட்டவும்.பின்பு தேவையான அளவு தண்ணீர்
ஊற்றி பிசையவும். நன்கு பிசைய வேண்டும்.பின்பு அந்த மாவை எடுத்து நமது பெருவிரலால் அதனை எடுத்து எடுத்து விட வேண்டும்.அப்படி வரும் மாவை வலது கையின் பெருவிரலுக்கும் ,ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வரும் இடைவெளியில் ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து வைக்க வேண்டும். இதனை எண்ணைக்குள் போட்டு குறைந்தது 7 மணி நேரம் ஊற விட வேண்டும்.

அதனை நன்கு மெல்லிய தாக பரத்த வேண்டும். (மல்லு வேட்டி போல மெல்லியதாக ). பின்பு அதனை எடுத்து கையில் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு லேசாக தட்ட வேண்டும். பின்பு அதனை சுற்ற வேண்டும். அதில் சிறு சிறு முட்டைகள் போல வரும்.( பரோட்டா பரத்தும் போது லேசாக கிழியும்அப்படி வந்தால் தான் நல்லது.)

தோசைக்கல்லில் போடும் போது சுற்றி வைத்துள்ள பரோட்டாவை மேலும் சிறிது பரத்தி விட்டு கல்லில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுக்கவும். குறைந்தது மூன்று மூன்றாக எடுத்து சூடாக இருக்கும் போதே லேசாக தட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான பரோட்டா ரெடி.

Friday, June 4, 2010

கூடுவில் நான்

சமையல் குறிப்புகளில் இருந்து சற்று வேறு பட்ட பதிப்பு இது. ஒரு பெண்களால் பெண்களுக்கு தொடங்க பட்ட அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன்... இருக்கின்றேன்.. அந்த அமைப்பை பற்றி ஒரு சிறிய பதிப்பு.

மதுரையில் 5 வருடங்களுக்கு முன்பு பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் "கூடு". பல தரப்பட்ட பெண்கள் {வேலைக்கு போகும் பெண்கள் , கல்லூரியில் படிக்கும் பெண்கள் ,house wives} கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாகும்.பல தரப்பட்ட பெண் எழுத்தாளர்கள் படைப்பினை, கலந்து உரையாடுவோம். பெண்ணியம் பற்றிய கருத்துகளும் விவாதித்து வருகிறோம் .ஒவ்வொரு வருடமும் கூடு ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.
இந்த
வருடம் நாங்கள் அந்த வைபவத்தை கூடுதலாக கொடைக்கானல் பண்ணைக்காட்டில் கொண்டாடினோம். இந்த கொண்டாட்டதில் முக்கிய பாகம் எழுத்து பட்டறை. இரண்டு நாட்கள் நடந்த இந்த பட்டறையில் எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம். அதை விட முக்கியமாக தோழியர்கள் 14 பேரும் சேர்ந்து 2 நாட்கள் அந்த climate ஐ அனுபவித்து மகிழ்ந்தோம்.

இன்னும் வரும் ஆண்டுகளிலும் இந்த அமைப்பின் நிகழ்வுகளை சிறு சிறு தொகுப்புகளாக பதிவு செய்கின்றேன். மறுபடியும் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்... வளர்க நலமுடன்...

.

Thursday, June 3, 2010

மட்டன் கொழம்பு - அருப்புகோட்டை சிறப்பு

மற்றும் ஒரு செய் முறை இந்த பதிப்பிலும். மட்டன் கொழம்பு தமிழ்நாடு முழுதிலும் பொதுவானது என்றாலும், இது எங்கள் ஊரின் செய் முறை.

தேவையான பொருட்கள்:
  1. மட்டன் - 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது- 1 table spoon
  3. சின்ன வெங்காயம் - 150 கிராம் ( பொடியாக நறுக்கியது)
  4. தக்காளி - 150 கிராம்
  5. கடுகு உளுத்தம் பருப்பு - 1/4 tea spoon
  6. பெருஞ்சீரகம் - 1/4 tea spoon
  7. கரம் மசாலா தூள் - 1/8 tea spoon
  8. கறி வேப்பிலை
  9. கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
  10. தேங்காய் பால் -1 cup
  11. வீட்டில் அரைத்த மசாலா பொடி - 2 tea spoon
  12. மிளகாய் பொடி - சிறிது அளவு
அரைக்க:
  1. தேங்காய் -1 பெரிய பத்தை
  2. கச கசா -1/2 spoon
  3. முந்திரி பருப்பு - 10
  4. சோம்பு - 1/4 கரண்டி
இந்த மூன்றையும் வெண்ணை போல் அரைத்து கொள்ளவும்.

செய் முறை:
  1. குக்கரில் 1 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  2. கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்
  3. சோம்பு போட்டு பொரிக்கவும்.
  4. வெங்காயம் போட்டு மினு மினுப்பாக வரும் வரை வதக்கவும்
  5. கறி வேப்பிலை கொத்த மல்லி போட்டு வதக்கவும்.
  6. நறுக்கிய தக்காளி போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.
  7. மட்டன் -ஐ சேர்த்து மேலும் சிறுது வெண்மை நிறம் வரும் வதக்கவும்
  8. மசாலா பொடி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
  9. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  10. கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
  11. அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
  12. 1 நிமிடம் வதக்கவும்.
  13. தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு ஊற்றி குக்கரை மூடவும்.
  14. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 15 -20 நிமிடம் வைக்கவும்.
  15. ஸ்டீம் அடங்கிய உடன் விசில்- ஐ எடுத்து நறுக்கி வைத்துள்ள கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும்.
  16. சுவையான கொழம்பு ரெடி.
  17. இதை இட்லி, தோசை, பூரி உடன் சாப்பிடலாம்.
  18. சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.



Saturday, May 29, 2010

அசோஹா - கும்பகோணம் சிறப்பு

தோழர்களே, தோழியர்களே
இது என் முதல் வலை பதிவு ஆஹும். இந்த பதிப்பின் மூலம் மேலும் மேலும் என்னால் ஆனா சின்ன சின்ன குறிப்புகளை தருவதற்கு விரும்புகிறேன்.. இதோ இன்று நான் தொடங்கும் முதல் பதிப்பு... கும்பகோணம், தஞ்சை ஆஹிய இடங்களில் பரிச்சியம் ஆனா அசோஹா என்னும் இனிப்பின் செய்முறையை இதில் பதிக்கிறேன்.

தேவையான பொருட்கள்:
  1. பாசி பருப்பு - 1 டம்ளர்
  2. சக்கரை - 1 1/2 டம்ளர்
  3. கோதுமை மாவு - 1/௨ டம்ளர்
  4. நெய் - 3 குழி கரண்டி
  5. முந்திரி பருப்பு, ஏலக்காய், கிசு முசு - தேவையான அளவு
செய் முறை :
  1. பாசி பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் பொன் நிறத்திற்கு வறுத்து கொள்ளவும்.
  2. பின்பு அதனை வறுத்த வாடை போகும் வரை நன்கு கழுவவும். ( 6 முறை)
  3. 6 1/2 டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. அதில் கழுவின பாசி பருப்பை போட்டு வேக விடவும்.(தண்ணீர் மீந்து விடாமலும் பருப்பு குழையாமலும் அடி பிடிக்காமலும் இருத்தல் வேண்டும்)
  5. பின்பு அதனை மத்தில் நன்கு குழைய மசிக்க வேண்டும்
  6. கோதுமை மாவை முதலிலேயே நெய் ஊற்றி மணம் வரும் வரை வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  7. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் பாசி பருப்புடன் சக்கரையை போட்டு கிளற வேண்டும்.
  8. இத்துடன் வறுத்த கோதுமை மாவை போட்டு நன்கு கிளறவும்.
  9. நாடு நடுவே நெய் ஊற்றி கிளறவும்.
  10. அத்துடன் முந்திரி கிசு முசு ஏல பொடி போட்டு கிளறவும்
  11. நன்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.
  12. ருசியான அசோஹா தயார்.
இதுதான் என் முதல் பதிப்பை முடித்து கொள்கிறேன். உங்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் விமர்சனங்களை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்...

மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிப்பில்...