Saturday, May 29, 2010

அசோஹா - கும்பகோணம் சிறப்பு

தோழர்களே, தோழியர்களே
இது என் முதல் வலை பதிவு ஆஹும். இந்த பதிப்பின் மூலம் மேலும் மேலும் என்னால் ஆனா சின்ன சின்ன குறிப்புகளை தருவதற்கு விரும்புகிறேன்.. இதோ இன்று நான் தொடங்கும் முதல் பதிப்பு... கும்பகோணம், தஞ்சை ஆஹிய இடங்களில் பரிச்சியம் ஆனா அசோஹா என்னும் இனிப்பின் செய்முறையை இதில் பதிக்கிறேன்.

தேவையான பொருட்கள்:
  1. பாசி பருப்பு - 1 டம்ளர்
  2. சக்கரை - 1 1/2 டம்ளர்
  3. கோதுமை மாவு - 1/௨ டம்ளர்
  4. நெய் - 3 குழி கரண்டி
  5. முந்திரி பருப்பு, ஏலக்காய், கிசு முசு - தேவையான அளவு
செய் முறை :
  1. பாசி பருப்பை வெறும் வாணலியில் மிதமான தீயில் பொன் நிறத்திற்கு வறுத்து கொள்ளவும்.
  2. பின்பு அதனை வறுத்த வாடை போகும் வரை நன்கு கழுவவும். ( 6 முறை)
  3. 6 1/2 டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. அதில் கழுவின பாசி பருப்பை போட்டு வேக விடவும்.(தண்ணீர் மீந்து விடாமலும் பருப்பு குழையாமலும் அடி பிடிக்காமலும் இருத்தல் வேண்டும்)
  5. பின்பு அதனை மத்தில் நன்கு குழைய மசிக்க வேண்டும்
  6. கோதுமை மாவை முதலிலேயே நெய் ஊற்றி மணம் வரும் வரை வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.
  7. அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் பாசி பருப்புடன் சக்கரையை போட்டு கிளற வேண்டும்.
  8. இத்துடன் வறுத்த கோதுமை மாவை போட்டு நன்கு கிளறவும்.
  9. நாடு நடுவே நெய் ஊற்றி கிளறவும்.
  10. அத்துடன் முந்திரி கிசு முசு ஏல பொடி போட்டு கிளறவும்
  11. நன்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.
  12. ருசியான அசோஹா தயார்.
இதுதான் என் முதல் பதிப்பை முடித்து கொள்கிறேன். உங்களிடம் இருந்து கருத்துகள் மற்றும் விமர்சனங்களை எதிர்பார்த்து விடை பெறுகிறேன்...

மீண்டும் சந்திப்போம் மற்றொரு பதிப்பில்...