Friday, June 4, 2010

கூடுவில் நான்

சமையல் குறிப்புகளில் இருந்து சற்று வேறு பட்ட பதிப்பு இது. ஒரு பெண்களால் பெண்களுக்கு தொடங்க பட்ட அமைப்பில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன்... இருக்கின்றேன்.. அந்த அமைப்பை பற்றி ஒரு சிறிய பதிப்பு.

மதுரையில் 5 வருடங்களுக்கு முன்பு பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் "கூடு". பல தரப்பட்ட பெண்கள் {வேலைக்கு போகும் பெண்கள் , கல்லூரியில் படிக்கும் பெண்கள் ,house wives} கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு இடமாகும்.பல தரப்பட்ட பெண் எழுத்தாளர்கள் படைப்பினை, கலந்து உரையாடுவோம். பெண்ணியம் பற்றிய கருத்துகளும் விவாதித்து வருகிறோம் .ஒவ்வொரு வருடமும் கூடு ஆண்டு விழா கொண்டாடுகிறோம்.
இந்த
வருடம் நாங்கள் அந்த வைபவத்தை கூடுதலாக கொடைக்கானல் பண்ணைக்காட்டில் கொண்டாடினோம். இந்த கொண்டாட்டதில் முக்கிய பாகம் எழுத்து பட்டறை. இரண்டு நாட்கள் நடந்த இந்த பட்டறையில் எழுதுவது எப்படி என்பதை கற்றுக்கொண்டோம். அதை விட முக்கியமாக தோழியர்கள் 14 பேரும் சேர்ந்து 2 நாட்கள் அந்த climate ஐ அனுபவித்து மகிழ்ந்தோம்.

இன்னும் வரும் ஆண்டுகளிலும் இந்த அமைப்பின் நிகழ்வுகளை சிறு சிறு தொகுப்புகளாக பதிவு செய்கின்றேன். மறுபடியும் மற்றும் ஒரு பதிவில் சந்திப்போம்.

வாழ்க வளமுடன்... வளர்க நலமுடன்...

.

Thursday, June 3, 2010

மட்டன் கொழம்பு - அருப்புகோட்டை சிறப்பு

மற்றும் ஒரு செய் முறை இந்த பதிப்பிலும். மட்டன் கொழம்பு தமிழ்நாடு முழுதிலும் பொதுவானது என்றாலும், இது எங்கள் ஊரின் செய் முறை.

தேவையான பொருட்கள்:
  1. மட்டன் - 1/2 கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது- 1 table spoon
  3. சின்ன வெங்காயம் - 150 கிராம் ( பொடியாக நறுக்கியது)
  4. தக்காளி - 150 கிராம்
  5. கடுகு உளுத்தம் பருப்பு - 1/4 tea spoon
  6. பெருஞ்சீரகம் - 1/4 tea spoon
  7. கரம் மசாலா தூள் - 1/8 tea spoon
  8. கறி வேப்பிலை
  9. கொத்தமல்லி - பொடியாக நறுக்கியது
  10. தேங்காய் பால் -1 cup
  11. வீட்டில் அரைத்த மசாலா பொடி - 2 tea spoon
  12. மிளகாய் பொடி - சிறிது அளவு
அரைக்க:
  1. தேங்காய் -1 பெரிய பத்தை
  2. கச கசா -1/2 spoon
  3. முந்திரி பருப்பு - 10
  4. சோம்பு - 1/4 கரண்டி
இந்த மூன்றையும் வெண்ணை போல் அரைத்து கொள்ளவும்.

செய் முறை:
  1. குக்கரில் 1 குழி கரண்டி எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கவும்.
  2. கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்
  3. சோம்பு போட்டு பொரிக்கவும்.
  4. வெங்காயம் போட்டு மினு மினுப்பாக வரும் வரை வதக்கவும்
  5. கறி வேப்பிலை கொத்த மல்லி போட்டு வதக்கவும்.
  6. நறுக்கிய தக்காளி போட்டு நன்கு மசியும் வரை வதக்கவும்.
  7. மட்டன் -ஐ சேர்த்து மேலும் சிறுது வெண்மை நிறம் வரும் வதக்கவும்
  8. மசாலா பொடி சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கவும்.
  9. தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
  10. கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.
  11. அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.
  12. 1 நிமிடம் வதக்கவும்.
  13. தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு ஊற்றி குக்கரை மூடவும்.
  14. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து 15 -20 நிமிடம் வைக்கவும்.
  15. ஸ்டீம் அடங்கிய உடன் விசில்- ஐ எடுத்து நறுக்கி வைத்துள்ள கொத்த மல்லி தூவி அலங்கரிக்கவும்.
  16. சுவையான கொழம்பு ரெடி.
  17. இதை இட்லி, தோசை, பூரி உடன் சாப்பிடலாம்.
  18. சாதத்துடன் சேர்ந்து சாப்பிட சிறிது புளி சேர்த்து கொள்ளவும்.