Thursday, March 24, 2011

சுவையான பரோட்டா

அன்பானவர்களே,
நீண்டகாலம் ஆகிவிட்டது,நாம் பேசி.எனக்கு ப்ளாக் அறிவு கொஞ்சம் குறைவு தான்.

என்னுடைய பெண்களிடம் கேட்டுத்தான் நான் இதனுள்ளே வருகின்றேன்.
எனக்கு தெரிந்த சமையலின் ஒரு சிறு துளியை தான் இப்பொழுதுஉங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்


பரோட்டா செய்யும் முறை:(இரண்டு பேருக்கு மட்டும்)

முதலில் கால்படியில் முக்கால் பாகம் எடுத்து சலித்துக் கொள்ளவும். அத்துடன் பெயருக்கு சிறிதளவு உப்பு சேர்க்கவும். அத்துடன் டீஸ்பூன் எண்ணெய்சேர்க்கவும்.இந்தமூன்றையும் ஒரு ரெண்டு நிமிடம் பிரட்டவும்.பின்பு தேவையான அளவு தண்ணீர்
ஊற்றி பிசையவும். நன்கு பிசைய வேண்டும்.பின்பு அந்த மாவை எடுத்து நமது பெருவிரலால் அதனை எடுத்து எடுத்து விட வேண்டும்.அப்படி வரும் மாவை வலது கையின் பெருவிரலுக்கும் ,ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் வரும் இடைவெளியில் ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவுக்கு எடுத்து வைக்க வேண்டும். இதனை எண்ணைக்குள் போட்டு குறைந்தது 7 மணி நேரம் ஊற விட வேண்டும்.

அதனை நன்கு மெல்லிய தாக பரத்த வேண்டும். (மல்லு வேட்டி போல மெல்லியதாக ). பின்பு அதனை எடுத்து கையில் இரண்டு பக்கமும் பிடித்துக்கொண்டு லேசாக தட்ட வேண்டும். பின்பு அதனை சுற்ற வேண்டும். அதில் சிறு சிறு முட்டைகள் போல வரும்.( பரோட்டா பரத்தும் போது லேசாக கிழியும்அப்படி வந்தால் தான் நல்லது.)

தோசைக்கல்லில் போடும் போது சுற்றி வைத்துள்ள பரோட்டாவை மேலும் சிறிது பரத்தி விட்டு கல்லில் எண்ணெய் ஊற்றி பொறித்து எடுக்கவும். குறைந்தது மூன்று மூன்றாக எடுத்து சூடாக இருக்கும் போதே லேசாக தட்டி எடுத்து வைக்கவும்.

சுவையான பரோட்டா ரெடி.

No comments:

Post a Comment